சுடச்சுட

  

  பண்ருட்டியில் ரயில்வே கேட்டின் ஒரு பகுதி வியாழக்கிழமை முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   பண்ருட்டியில், சென்னை சாலையில் ரயில்வே கேட் உள்ளது.
   விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்க ரயில்கள் இந்த வழித்தடத்தில் சென்று வருகின்றன. தற்போது, இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால், கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மட்டும் வழக்கம் போல் ரயில்வே பாதையை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
   இந்த நிலையில், வியாழக்கிழமை காலை பயணிகள் ரயில் வருகையையொட்டி, ரயில்வே கேட் மூடும் பணியில் கேட் கீப்பர் ஈடுபட்டார். அப்போது, ரயில்வே கேட்டின் ஒரு பகுதி திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. தண்டவாளப் பகுதியில் கேட் விழவில்லை. இதனால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பில்லை. ஆனால், சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து தடைபட்டது.
   தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து ரயில்வே கேட்டை சீரமைத்தனர். இந்த கேட் இதேபோல் ஏற்கெனவே பலமுறை முறிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai