சுடச்சுட

    

    ரூபாய் நோட்டு விவகாரத்தில் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் பிரச்னைகளை களையக்கோரி, கடலூரில் மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தினர்
     புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     சங்கத்தின் உதவித் தலைவர் பி.கே.வி.ரமணி தலைமை வகித்தார். வங்கி ஓய்வுபெற்றோர் சங்கத் தலைவர் கே.திருமலை முன்னிலை வகித்தார். பொதுச் செயலர் எஸ்.ஸ்ரீதரன் விளக்க உரையும், அதிகாரிகள் சங்க நிர்வாகி ராஜமாணிக்கம், கடலூர் வட்ட வங்கி ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.ராமதாஸ், மாவட்ட வங்கி ஊழியர் சங்க செயலர் குருபிரசாத் ஆகியோர் வாழ்த்துரையும் வழங்கினர்.
     ஆர்ப்பாட்டத்தில், போதுமான பணத்தை அனைத்து வங்கிகளுக்கும் அரசு வழங்க வேண்டும். பணம் வழங்குவதில் பாரபட்சத்தை தவிர்ப்பதோடு, ஏடிஎம்களை முழுமையாக இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பணமதிப்பு நீக்கத்தால் உயிர் நீத்த பொதுமக்கள், வங்கி ஊழியர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
     பெரும் பணக்காரர்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அதிகளவில் எப்படிக் கிடைத்தது என்பது குறித்து மத்திய புலனாய்வுத் துறை மூலம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai