சுடச்சுட

  

  சிதம்பரத்தில், கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
   ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ஹரிதாஸ், கரும்பு ஆராய்ச்சி நிலையத் தலைவர் ஜெயச்சந்திரன், வேளாண்மை உதவி இயக்குநர் ரமேஷ், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் பாபு, விவசாய அதிகாரி ஆறுமுகம், அறக்கட்டளை திட்ட மேலாளர் முகில் நிலவன், மேலாளர் மெய்கண்டன் ஆகியோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில், நெல், கரும்பு மற்றும் காய்கறி சாகுபடியில் நவீன முறைகள், தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில், பொன்னங்கோவில், ஆண்டிப்பாளையம், சக்திவிளாகம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் காணொலிக் காட்சி மூலம், விவசாயத்தில் நவீன சாகுபடி முறைகள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்களிடம் விளக்கம் பெற்றனர். நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai