சுடச்சுட

    

    விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், முந்திரி பயிரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்ட 3 நாள் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது.
     நிகழ்ச்சியில், முந்திரிப் பயிர் சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய பயிர் நேர்த்தி முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி, பட்டூர் ஆராய்ச்சி நிலைய செயல் இயக்குநர் எம்.ஜி.நாயக் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
     விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் அனீசாராணி, கொல்லம் முந்திரி ஆராய்ச்சி நிலைய துணைச் செயலர் எஸ்.கண்ணன், கடலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பெ.ஹரிதாஸ் மற்றும் விவசாயிகள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
     கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது (படம்). ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai