சுடச்சுட

    

    ஹைக்கூ கவிதைப் போட்டியில் பங்கேற்க விரும்புவோருக்கு, மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
     இதுதொடர்பாக மன்றத்தின் மாவட்டத் தலைவர் கடல்.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனவரியில் பிறக்கும் புத்தாண்டில் தமிழ்க் ஹைக்கூ கவிதையின் நூற்றாண்டு கவிதைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
     இதையொட்டி நடைபெறும் ஹைக்கூ கவிதைப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 3 ஹைக்கூ கவிதைகளை மட்டும் அஞ்சல் அட்டையில் எழுதி, பெயர், வயது, வீட்டு முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண்ணை குறிப்பிட்டு வருகிற ஜனவரி 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். (ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது).
     தேர்ந்தெடுக்கப்படும் ஹைக்கூ கவிதைகளுக்கு, முதல் 2 பரிசுகளும், 20 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் அளிக்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மன்றத்தின் சார்பில் அறிவிப்புக் கடிதம் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும்.
     கவிதைகளை, "பாரதிதாசன் மன்றம், 41, காமராஜ் நகர், ஆல்பேட்டை, கடலூர்-1' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai