சுடச்சுட

    

    3 பெண்கள் கொலை வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறை

    By கடலூர்,  |   Published on : 30th December 2016 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனித்தனி சம்பவங்களில் 3 பெண்களைக் கொன்று 54 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், இளைஞருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து, கடலூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
     கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஊராட்சியைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி கெஜலட்சுமி (40). இவர் 11.4.2015 அன்று வீட்டு குளியலறையில் சடலமாகக் கிடந்தார். அவர் அணிந்திருந்த 12 பவுன் நகை மற்றும் பீரோவிலிருந்த 20 பவுன் நகைகளும் கொள்ளைபோனது. இதுதொடர்பாக வடலூர் அருகே உள்ள சேராக்குப்பத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகனும், கொத்தனாருமான ராஜா (32) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
     அவரிடம் நடத்திய விசாரணையில், மொத்தம் 5 கொலை வழக்குகளில் அவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது.
     இதில், நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்த ஜவுளிக் கடை உரிமையாளர் கிருஷ்ணசாமி மனைவி சரஸ்வதியை (65) 2012-ஆம் ஆண்டு ஜன.4-ஆம் தேதி கழுத்தை நெரித்துக் கொன்று 18 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. பின்னர் 2013ஆம் ஆண்டு பண்ருட்டி அருகே உள்ள எஸ்.ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி முத்தாளை (80) கழுத்தை நெரித்துக் கொன்று, நான்கரை பவுன் தங்க நகையைக் கொள்ளையடித்ததும், மேலும் நெல்லிக்குப்பம் பகுதியில் 2 வழக்குகளில் தொடர்பிருப்பதும் தெரிய வந்தது.
     இவர்களில் கெஜலட்சுமி, சரஸ்வதி, முத்தாள் ஆகியோரது கொலை வழக்கு விசாரணைகள், கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.செல்வம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். கெஜலட்சுமி, சரஸ்வதி ஆகியோரது கொலை வழக்குகளில் ராஜாவுக்கு வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்கும் தண்டனையும், முத்தாள் கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனையும் விதித்தார். இந்த 3 வழக்குகளுக்கும் சேர்த்து ரூ.6,500 அபராதம் விதித்தார்.
     மேலும், குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, குற்றவாளியான ராஜா அவரது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்கும் வகையில் தக்க தண்டனையாக இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது என நீதிபதி குறிப்பிட்டார்.
     இதையடுத்து, ராஜா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai