சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டிப்பதாகக் கூறி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  இந்த மாதத்தின் இறுதி வேலை நாளான வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லையாம். நிதி நெருக்கடியே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.மனோகரன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   சங்கத் தலைவர் எஸ்.மனோகரன் கூறுகையில், நிதி நெருக்கடி பிரச்னைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் திங்கள்கிழமைக்குள் தீர்வு காணவில்லையெனில் ஆசிரியர்கள், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவர் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai