சுடச்சுட

  

  கடலூரில் அரசு விடுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசுக் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியின் எதிரே அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் குடிநீர், தரமான உணவு, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லை எனக்கூறி வெள்ளிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   தங்களது உடமைகளுடன் விடுதியிலிருந்து வெளியே வந்த மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
  அவர்களிடம் தேவனாம்பட்டினம் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai