சுடச்சுட

  

  வயிற்று வலியால் தலைக்கு பூசும் சாயத்தை
  குடித்த இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
  குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் தமிழ்ச்செல்வன். இவரது, சகோதரர் சந்தனமோகன் (34). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். சம்பவத்தன்று வயிற்று வலியின் காரணமாக அவதிப்பட்டார். அப்போது, வீட்டில் இருந்த தலைக்கு பூசும் சாயத்தை குடித்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்டார்.
   இதையடுத்து, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப்பின், தீவிர சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தார்.  
  இதுகுறித்து, குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai