சுடச்சுட

  

  விருத்தாசலத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர், தவறி விழுந்ததில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
  சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. அப்போது ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர், அங்கிருந்த கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கினார்.
  அப்போது, ரயில் புறப்பட்டது. இதையடுத்து அந்த பயணி ஓடிச் சென்று ரயிலில் ஏற முயன்றபோது, கால் தவறி தண்டவாளத்தில் விழுந்தார். அவர் மீது ரயில் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
   தகவலறிந்த விருத்தாசலம் இருப்புப் பாதை போலீஸார்
  சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில் உயிரிழந்தவர் சிவகங்கையைச் சேர்ந்த கண்ணன் (55) எனத் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai