சுடச்சுட

  

  கடலூர் பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்திய வாலிபர் சங்கத்தினர்

  By DIN  |   Published on : 31st December 2016 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
  வாலிபர் சங்க நகரத் தலைவர் ஏ.ராஜேஷ், மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலர் சி.சந்திரமோகன் ஆகியோர் தலைமை வகித்தனர். சங்கத்தினர் பேருந்து நிலையத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி, நோய் தடுப்பு மருந்து தெளித்தனர்.
  கடலூர் பேருந்து நிலையத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். பொதுக் கழிப்பறையை பராமரித்தல், பயணிகள் காத்திருப்புக் கூடம் சீரமைப்பு, பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குதல் ஆகியவற்றில் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினர்.
  வாலிபர் சங்க மாவட்டச் செயலர் ஆர்.அமர்நாத், நகரச் செயலர் டி.எஸ்.தமிழ்மணி, பொருளர் டி.அரசன், மாணவர் சங்க நகரச் செயலர் இ.நிர்மல்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai