சுடச்சுட

  

  கடலூரில்  சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரி, பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அண்ணாமேம்பாலம் முதல் கம்மியம்பேட்டை வரை கெடிலம் ஆற்றின் கரையோரம் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை  2015-ஆம் ஆண்டு பெய்த கனமழையில் சேதமடைந்ததை அடுத்து, ரூ.99 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. எனினும் சில வாரங்களிலேயே சாலை மீண்டும் சேதமடைந்தது.
   எனவே, இந்த சாலையை சீரமைக்கக் கோரி, குண்டும் குழியுமான சாலைப் பகுதியில் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் மு.மருதவாணன், வெண்புறா குமார், பி.பண்டரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி தி.ச.திருமார்பன், மமக நிர்வாகி மன்சூர், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலர் மணிவண்ணன், ஊழல் ஒழிப்பு இயக்கம் அப்பாஜி, சுற்றுச்சூழல் ஆர்வலர் தி.அருள்செல்வம், தனியார் பேருந்து தொழிலாளர் சங்கம் குரு.ராமலிங்கம், மீனவ விடுதலை வேங்கி கட்சி செல்வ.ஏழுமலை, நுகர்வோர் அமைப்பு திருநாவுக்கரசு, மக்கள் அதிகாரம் ராமலிங்கம், அன்னை தெரசா சமூக நல பாதுகாப்பு பேரவை நிர்வாகி ரவி, திருப்பாதிரிபுலியூர் சரவணன், செம்மங்குப்பம் சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai