Enable Javscript for better performance
அதிமுக, திமுக ஆட்சிகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை: ஜி.ராமகிருஷ்ணன்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக, திமுக ஆட்சிகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை: ஜி.ராமகிருஷ்ணன்

    By நெய்வேலி  |   Published on : 01st March 2016 06:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக, திமுக ஆட்சிகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

    அக்கட்சி சார்பில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம், நெய்வேலி, வட்டம் 25, எட்டு ரோடு சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நெய்வேலி நகரச் செயலர் எஸ்.திருஅரசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு மூசா, மாவட்ட செயற்குழு வி.முத்துவேல், மாவட்டக் குழு எம்.மீனாட்சிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆற்றிய சிறப்புரை:

     கடந்த 2004 முதல் 2015ஆம் ஆண்டு வரை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி கடனை மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், விவசாயக் கடன், கல்விக் கடனை கட்டாய முறையில் வசூல் செய்கின்றனர்.  பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் குறியாக உள்ளன.

     அதிமுக, திமுக ஆட்சிகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. திமுக ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நிலையில் அவர்கள்  எப்படி ஊழலை ஒழிப்பார்கள் என தெரியவில்லை. ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவதற்கு தமிழகத்தின் இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளுக்கும் தார்மீக உரிமை இல்லை. இதனால்தான் மக்கள் நலக் கூட்டணியை அமைத்துள்ளோம். இக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழில் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்படும். இயற்கை வளத்தைக் கொள்ளையடித்தும், ஊழல் செய்தும் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai