சுடச்சுட

    

    நெய்வேலியில் நகர அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நகரச் செயலர் க.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.  அவைத் தலைவர் கா.வெற்றிவேல் வரவேற்றார். அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத் தலைவர் பி.அபு, பொருளர் யு.தேவாநந்தன், அலுவலகச் செயலர் பி.அல்போன்ஸ், நிர்மலா கூட்டுறவு சங்கத் தலைவர் பி.தனவேல், துணைச் செயலர் ஏ.பாலசுப்ரமணியன், மாவட்டப் பிரதிநிதிகள் ஆ.ராமலிங்கம், ஆர்.கஞ்சமலை, பி.கர்லின், இணைச் செயலர்கள் பத்மா செல்வராஜ், சி.ராஜாமணி முன்னிலை வகித்தனர்.

     கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அமைச்சர் எம்.சி.சம்பத், ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, தென்னங்கன்று உள்ளிட்ட நல உதவிகளை வழங்கிப் பேசினார். நெய்வேலி எம்எல்ஏ எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், தலைமைக் கழகப் பேச்சாளர் டி.ஏ.பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நகரப் பொருளர் ஆர்.செல்வராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai