சுடச்சுட

  

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகளாக பெ.பாவாணன் உள்ளிட்டோரை கட்சித் தலைமை அண்மையில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் சா.முல்லைவேந்தன் தலைமையில் கடலூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

   மண்டலச் செயலர் சு.திருமாறன், கடலூர் மக்களவைத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், நிர்வாகிகள் இல.திருமேனி, மு.அறிவுடைநம்பி, மொ.வி.சக்திவேல், பால.புதியவன், தி.ச.திருமார்பன் முன்னிலை வகித்தனர். புதிய நிர்வாகிகள் பன்னீர்செல்வம், காத்தவராயன், ஜெயசீலன், சரிதா, அன்பரசன், தணிகைச்செல்வன், வெண்ணிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai