சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம், தொளார் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தனர்.

  கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், நல்லூர் ஒன்றியம் தொளார் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சாந்தி பாலச்சந்திரன், உறுப்பினர்கள் நா.வெங்கட்ராமன், ஆ.லெட்சுமி ஆகியோர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில், ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சியின் பொது நிதி மற்றும் தானே புயல் வீடுகள் கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

  இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது பலமுறை புகார் அளித்தும் ஊராட்சித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வார்டு பகுதிகளில் எந்தவிதமான வேலையும் நடைபெறவில்லை. வார்டு மக்களுக்கு நலத்திட்டப் பணிகளை செய்ய முடியாததாலும்,  முறைகேட்டுக்கு துணை போக முடியாத காரணத்தாலும் எங்களது பதவிகளை ராஜிநாமா செய்வதாக என அதில் குறிப்பிட்டிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai