சுடச்சுட

  

  வீடுகள் இடிக்கப்பட்ட பிரச்னையில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை ஒருவர் தனது குடும்ப அட்டையைத் திரும்ப ஒப்படைத்தார்.

  பண்ருட்டி வட்டம் மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கா.ராதாகிருஷ்ணன். இவருக்கு நத்தமேடு கிராமத்தில் சொந்தமாக இருந்த 2 வீடுகள் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டதாம்.

  ஆனால், வருவாய்த்துறை, மின்துறை, காவல்துறையினர் இணைந்து, தன்னை ஏமாற்றி வீட்டினை இடித்து விட்டதாக ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி வந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

  ஆனால், வழக்குப்பதிவு செய்யப்படவில்லையாம். இதுகுறித்து ஆட்சியரிடமும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

   இந்நிலையில், திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியரகம் வந்திருந்த ராதாகிருஷ்ணன், ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறினார்.

  மேலும், தனது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai