சுடச்சுட

    

    கடலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் குடும்ப அட்டை, கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 305 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரங்களை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

     கூட்டத்தில், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில், 40 நபர்களுக்கு தலா ரூ.3,386 மதிப்புள்ள தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும், பண்ருட்டி, விருதாசலத்தை சேர்ந்த 18 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டன.

     கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோ.ஷர்மிளா, சிறப்பு திட்ட செயலாக்க தனித்துணை ஆட்சியர் கோவிந்தன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai