சுடச்சுட

  

  செம்மங்குப்பத்தில் தனியார் நிறுவனத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

  கடலூர் காரைக்காடு அருகே உள்ள செம்மங்குப்பத்தில் மீன் எண்ணெய் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து துர்நாற்றம் வெளியேறுவதாக அடிக்கடி புகார் எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட துர்நாற்றத்தினால், அப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களில் சிலர் மயக்கமுற்றனர். இதனால், அப்போது சிலர் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

   இப்பிரச்னை தொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை பாமக மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் சென்று தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். சுமார் 3 மணி நேரமாக நிறுவனத்தின் வாயிலில் அமர்ந்திருந்தனர்.   இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் அப்பகுதியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai