சுடச்சுட

  

  கடலூரில் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  பிரதி மாதம் 1ஆம் தேதி சம்பளம் வழங்க வேண்டும். 144 துப்புரவுப் பணியாளர்களின் சம்பள நிலுவையை 2001 முதல் வழங்க வேண்டும். கூடுதல் நிரந்தரப் பணியாளர்கள், புதிய நியமனம் செய்திட வேண்டும்.

  நிலுவை சிறப்பு சேமநல நிதியை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருதல் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி,  மாவட்ட நகராட்சித் தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  சங்கத் தலைவர் நா.பக்கிரி தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் ச.சிவராமன், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், துணைத் தலைவர் சி.பக்கிரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். துணைத் தலைவர் மு.தனசேகரன், நிர்வாகிகள் கு.பழனி, ப.அரசகுரன், செ.காசிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai