சுடச்சுட

    

    தொட்டில் குழந்தை திட்டத்தில் பெண் சிசு சேர்ப்பு

    By கடலூர்  |   Published on : 01st March 2016 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொட்டில் குழந்தைத் திட்டத்தில், ஆதரவற்ற பெண் சிசு சேர்க்கப்பட்டது.

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுசை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை குறைவாக இருந்ததால், பச்சிளங்குழந்தைப் பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டது. இந்நிலையில், அக்குழந்தையின் தாயார் தலைமறைவானார். அவர் கொடுத்த முகவரியும் போலியானதாக இருந்தது.

    இந்நிலையில், 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் சைல்டு லைன் மூலமாக கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மீனாவிடம் ஒப்படைத்தது. அவர் அக்குழந்தையை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படும் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்த்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai