சுடச்சுட

    

    அண்ணாகிராமம் ஒன்றிய மதிமுக சார்பில் பூண்டி ஊராட்சியில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்டப் பிரதிநிதி மு.சிவக்குமார் தலைமை வகித்தார். கிளைச் செயலர் ஆர்.ராஜேந்திரன் வரவேற்றார். அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் எஸ்.கே.வெங்கடேசன் பேசினார்.

    மாவட்டப் பிரதிநிதிகள் சு.சுந்தரராஜன், இ.பி.பிரகாஷ், ஒன்றிய துணைச் செயலர்கள் கோ.பத்மநாபன், கு.ராஜவேலு, பொருளர் ஆர்.காசிநாதன், மாணவரணிச் செயலர் ஜெ.பிரசாத், துணைச் செயலர் சுதா பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது, குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai