மாநிலங்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை: தி.வேல்முருகன்
By நெய்வேலி | Published on : 01st March 2016 06:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக் கூடியதாக இல்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை: உணவுப் பொருள் விற்பனையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு என்பது, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மறைமுக செயலாகும்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களை மனதில் கொண்டு விவசாயிகள், ஏழை மக்களுக்கான அரசு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.