சுடச்சுட

    

    முதல்வரைப் பெண்கள் ஆதரிக்க வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத்

    By கடலூர்  |   Published on : 01st March 2016 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் முதல்வர் ஜெயலலிதாவை அவர்கள் ஆதரிக்க வேண்டும்   என அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

    கடலூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் 68ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிழக்கு ராமாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் ராம.பழனிச்சாமி தலைமை வகித்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், பிறப்பு முதல் இறப்பு வரையில் மக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியவர்

    ஜெயலலிதா. தனது அனைத்துத் திட்டங்களையும் பெண்களை மையமாக வைத்து, அவர்களின் முன்னேற்றத்துக்காக திட்டமிட்ட ஜெயலலிதாவை பெண்கள் எப்போதும் ஆதரிக்க வேண்டும் என்றார்.

    சொரத்தூர் ரா.ராஜேந்திரன் எம்எல்ஏ பேசுகையில், குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.100 கோடியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கு விரைவில் நிதி ஒதுக்கீடு பெறப்படும். குறிஞ்சிப்பாடி தொகுதியில் அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் முதல்வர் அறிவித்து செயல்படுத்தியுள்ளார் என்றார்.

    நடிகர் ராமராஜன் பேசுகையில், ஜன.17ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா அதிமுக ஆட்சியில் இருக்கும் போது கொண்டாடப்படுவதே எம்ஜிஆருக்கான மரியாதை என்றார்.  நிகழ்ச்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரம், விளையாட்டு உபகரணங்கள், புடவை, விவசாயிகளுக்கான உபகரணங்கள், தேய்ப்பு பெட்டிகள், குடம் உள்ளிட்டவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.  நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன், விவசாய அணி மாவட்டச் செயலர் என்.காசிநாதன், தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் ப.மணிமேகலை, தலைமைக் கழகப் பேச்சாளர் எஸ்.ஜலேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டக் கவுன்சிலர் சி.தேவநாதன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai