சுடச்சுட

  

  ரூ.1.81 கோடியில் புனரமைக்கப்பட்ட சமுதாயக் கூடங்கள்: என்எல்சி தலைவர் திறந்து வைத்தார்

  By நெய்வேலி  |   Published on : 01st March 2016 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெய்வேலி நகரியப் பகுதியில் ரூ.1.81 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட சமுதாயக் கூடங்களை என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

  நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நகரியப் பகுதியில் சமுதாயக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வட்டம் 10, 24-ல் உள்ள சமுதாயக் கூடங்கள், வட்டம் 24-ல் உள்ள உணவு பரிமாறும் கூடுதல்  பகுதி ஆகியவை முழுவதும் புனரமைக்கப்பட்டு குளிர்சாதன வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

   மேலும், வட்டம் 16-ல் உள்ள சமுதாயக் கூடத்தில் விருந்தினர் தங்கும் அறைகள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. கழிப்பறைகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அனைத்தும் சுமார் ரூ.1.81 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா வட்டம் 24-ல் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி சமுதாயக் கூடத்தினை திறந்து வைத்தார்.

   நிகழ்வில், திட்டம் மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் செல்வகுமார், நகர நிர்வாகப் பிரிவு செயல் இயக்குநர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai