சுடச்சுட

  

  வடலூரில் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் எம்.சி.சம்பத், 13 ஒன்றியங்களைச் சேர்ந்த 1,097 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கமும், ரூ.2.88 கோடிக்கான காசோலைகளும் வழங்கிப் பேசியதாவது:

  தமிழக முதல்வரின் திட்டங்களில் மக்களிடம் பெரிதும் பாராட்டு பெற்றது இத்திட்டமாகும்.

  இதில் பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் தலா 4 கிராம் தங்கம் வழங்கப்படுவதால் பெண்களிடம் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

   முதல்வரின் திட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டமாக உள்ளது.

  ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், அம்மா பரிசுப் பெட்டகம், கருவுற்ற மகளிருக்காக உதவித் தொகை திட்டம் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.

   மாவட்டத்தில் 26,318 பேர் திருமண உதவித் திட்டத்தில் பயனடைந்துள்ளனர். இவர்களில் 7,212 பேர் பட்டதாரிகள், 19,106 பேர் பட்டதாரி அல்லாத பயனாளிகள். நிதி உதவியாக ரூ.83,82,50,000, தலா 4 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 105.772 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

   நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் செல்வி ராமஜெயம், சொரத்தூர் ரா.ராஜேந்திரன், எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். முன்னதாக, மாவட்ட சமூக நல அலுவலர் ச.மீனா வரவேற்றார். கண்காணிப்பாளர் ரா.விஸ்நாதன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai