சுடச்சுட

    

    நெய்வேலியில் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.

    நெய்வேலி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து, ஏஐடியுசி மாவட்டச் செயலர் எம்.சேகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பேரணியாக என்எல்சி தலைமை அலுவலகத்தை நோக்கி வந்தனர். இவர்களை நேரு சிலை அருகே காவல் துறையினர் தடுத்தி நிறுத்தினர்.

     பின்னர், ஏஐடியுசி மாவட்டச் செயலர் எம்.சேகர் உள்ளிட்ட  நிர்வாகிகள் 5 பேர், என்எல்சி தலைமை அலுவலகத்துக்குச் சென்று, மனித வளத்துறை பொது மேலாளர் தியாகராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பின்னர் தொழிலாளர்களிடம் எம்.சேகர் பேசியது:

    சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும் என அதிகாரியிடம் பேசியுள்ளோம். அவர் ஆய்வு செய்வதாகக் கூறியுள்ளார். இம்மாத இறுதிக்குள் பஞ்சப்படி வழங்காவிட்டால், புதுச்சேரி மற்றும் சென்னையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றார்.

     அரசுப் பணியாளர் சங்க அகில இந்திய சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன், குடிநீர் வாரிய ஏஐடியுசி மாநிலத் தலைவர் அழகிரிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai