சுடச்சுட

  

  தேசிய, மாநில விளையாட்டுப் போட்டி: நகராட்சி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

  By கடலூர்  |   Published on : 02nd March 2016 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

  இப்பள்ளியின் பிளஸ்-2 மாணவர் வன்னியர் பாளையத்தைச் சேர்ந்த ம.சுரேந்தர், அண்மையில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் தமிழக அணி சார்பில் பங்கேற்றார்.

  போட்டியில் சுரேந்தர் 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இவரது தந்தை மணிவண்ணன் மீன்வண்டி ஓட்டுநராக உள்ளார்.  இதேபோல் இப்பள்ளியின் பிளஸ்-1 மாணவர் மார்க்ரிக்கார்டோ ஜான்சன் மாநில அளவில் நடைபெற்ற பூப்பந்துப் போட்டியில் முதலிடம் பெற்றார். சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் இருவருக்கும் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஹேமலதா தலைமையில் நடைபெற்ற விழாவில், மாணவர்கள் இருவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், உதவித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்,  உடற்கல்வி ஆசிரியர்கள் கமால்பாட்ஷா, நிஷா மற்றும் பள்ளி ஆசிரியர்கள்  பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai