சுடச்சுட

  

  நகராட்சி காலி இடத்தைப் பயன்படுத்தி வருவாயைப் பெருக்க வலியுறுத்தல்

  By சிதம்பரம்  |   Published on : 02nd March 2016 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நகராட்சி காலி இடத்தைப் பயன்படுத்தி வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் நிர்மலாசுந்தர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

  த.ஜேம்ஸ் விஜயராகவன் (திமுக): நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் கீழசன்னதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

  ஆணையர் ஜெகதீசன் (பொறுப்பு): உயர்நீதிமன்றத்தில் வரும் 4ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருவதால் அதன் பின் ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோடையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  பெரு.திருவரசு (விடுதலைச் சிறுத்தைகள்): 1 முதல் 4ஆவது வார்டு வரை சாக்கடை கழிவுநீர் வழிந்தோடி புறவழிச் சாலையில் ஏரி போல் காட்சியளிக்கிறது. அவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.

  எல்.சீனுவாசன் (மதிமுக): எனது கோரிக்கையை ஏற்று 27ஆவது வார்டில் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி. மேலும் சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்து, தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

  ஆ.ரமேஷ் (தவாக): நகராட்சிக்கு நிதி இல்லை என்று சொல்வதை விட, நகரின் மையப் பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான காலியிடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால் வருவாய் கிடைக்கும். எனவே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தலைவர்: இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

  கோ.நடராஜன் (திமுக): நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி தொடங்கும் பணிகள் தரமாக நடைபெற ஆய்வு செய்ய வேண்டும். வெள்ள பாதிப்பை அடுத்து எத்தனை சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளன?

  ஆணையர் (பொறுப்பு): பணிகளை கண்காணித்து, சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். இது வரை 13 சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளன. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

  கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், மீட்டிங் கிளார்க் காதர்கான் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai