சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

  இதுகுறித்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வெள்ள நிவாரணப் பணிகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், இக்கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்ப்பு மன்ற அரங்கில் மார்ச் 3ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சென்னையிலிருந்து ஓய்வூதிய இயக்குநர்  பங்கேற்கிறார். எனவே, ஓய்வூதியர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai