சுடச்சுட

  

  நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது: அரசுப் பணியாளர் மகா சம்மேளனம்

  By கடலூர்  |   Published on : 02nd March 2016 04:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசின் நிதி-நிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளன சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழைகள், நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.   வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறும்போது 60 சதவீதம் தொகை வரிவிதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வழிவகை இல்லை.

  மறைமுகமாக வரி உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai