சுடச்சுட

  

  மாவட்டத்தில் 75 ஆயிரம் பேர் பொதுத் தேர்வு எழுத உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தயார் எனவும் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2015-16ஆம் கல்வியாண்டுக்கான மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி ஏப்.1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் 196 பள்ளிகள் மூலமாக 14,218 மாணவர்கள், 15,916 மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். தனித் தேர்வர்களாக 3,705 பேர் என மொத்தம் 33,839 பேர் இத்தேர்வினை எழுதுகின்றனர்.

  தனித்தேர்வர்களுக்கு 8 மையங்கள் உள்பட மொத்தம் 82 தேர்வு மையங்களும், 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளன.

  தலா 82 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் உள்பட 1,586 பேரும், பறக்கும்படை, நிலைப்படையாக 200 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  மார்ச் 15ஆம் தேதி தொடங்கும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஏப்.13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை மாவட்டத்தில் 406 பள்ளிகள் மூலமாக 38,300 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களாக 2,912 பேர் உள்பட 41,212 பேர் எழுதுகிறார்கள். தேர்வுக்காக 117 மையங்கள், 12 கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் குடிநீர், மின்சாரம், கழிவறை வசதிகள் போதுமான அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, தேவையான பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.  தேர்வு மையத்துக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் செல்லிடப்பேசியை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai