சுடச்சுட

  

  மழை நிவாரணம் முழுமையாகக் கிடைக்கவில்லை: பண்ருட்டி நகர்மன்றக் கூட்டத்தில் புகார்

  By நெய்வேலி  |   Published on : 02nd March 2016 04:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மழை நிவாரணம் மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என பண்ருட்டி நகர்மன்றக் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

  நகர்மன்ற சாதாரணக் கூட்டம், அதன் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

  வடிவேல் (அதிமுக): கடலூர் சாலையில் உள்ள பழைய மருத்துவமனை வளாகம் புதர்மண்டிக் கிடக்கிறது. இதுகுறித்து மாவட்ட மருத்துவத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்து, சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சங்கர் (திமுக): மழை வெள்ள நிவாரணம் எங்கள் பகுதி மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை.

  தலைவர்: பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கி வருகிறோம் என்றார்.   இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் தஷ்ணா, துரை.ராமு, சங்கர் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   கூட்டத்தில், நகர்மன்ற துணைத் தலைவர் மல்லிகா ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai