Enable Javscript for better performance
மீன் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிர்ப்பு: எஸ்பியிடம் கிராம மக்கள் மனு- Dinamani

சுடச்சுட

    

    மீன் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிர்ப்பு: எஸ்பியிடம் கிராம மக்கள் மனு

    By கடலூர்  |   Published on : 02nd March 2016 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செம்மங்குப்பத்தில் செயல்பட்டு வரும் மீன் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்தனர்.

    கடலூர் காரைக்காடு அருகே உள்ள செம்மங்குப்பத்தில் மீனிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்திலிருந்து துர்நாற்றம் வெளியேறுவதாக அடிக்கடி புகார் எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் வீசிய துர்நாற்றத்தால் சில பெண்கள் மயக்கமுற்றதாகத் தெரிகிறது. இதனால், அக்கிராம மக்கள் திங்கள்கிழமை பாமக மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

     இந்நிலையில் செம்மங்குப்பம் கிராமத்தினர் செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து இப்பிரச்னை தொடர்பாக மனு அளித்தனர். அதில், பிரச்னை ஏற்படும் போதெல்லாம் தாற்காலிகமாக ஆலை நிறுத்தப்படுகிறது. மீண்டும் ஆலை இயங்கப்படும்போது, கிராம மக்களுக்கும் ஆலை நிர்வாகத்துக்குமிடையே தகராறு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இப்பிரச்னையில் உரிய தீர்வுகாண வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai