சுடச்சுட

  

  ரூ.5 கோடியில் மருத்துவமனைக் கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

  By கடலூர்  |   Published on : 02nd March 2016 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்டத்தில் ரூ.5.36 கோடி மதிப்பில் கடலூர், கம்மாபுரம், காடாம்புலியூர் பகுதிகளில் மருத்துவமனை தொடர்பான கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவம் தொடர்பானக் கட்டடங்கள் மற்றும் பல்வேறுத் துறைகளின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, புதிய அரசுக் கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

   இதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் ரூ.3.42 கோடியில் உயர் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவுக் கட்டடம், கண் சிகிச்சைப் பிரிவுக் கட்டடம், யோகா மற்றும் இயற்கை சிகிச்சைப் பிரிவுக் கட்டடம், தொற்று நோய் பிரிவுக் கட்டடம் மற்றும் ரூ.50 லட்சத்தில் கட்டடப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.   இதனைத் தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்களில் நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் எஸ்.மாதவி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், இருப்பிட மருத்துவர் சண்முகக்கனி, ரத்தப் பிரிவு மருத்துவர் ச.வித்யாசங்கர், நகராட்சி உறுப்பினர்கள் வ.கந்தன், கே.தமிழ்ச்செல்வன், ஜெ.அன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   மேலும், கம்மாபுரத்தில் ரூ.1.05 கோடி மதிப்பில் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம்,  காடாம்புலியூரில் ரூ.16.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்புக் கட்டடம், ரூ.23 லட்சத்தில் கட்டப்பட்ட மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

  இதேபோல், கடலூர் திருப்பாதிரிபுலியூர் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அன்னதானக் கூடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai