Enable Javscript for better performance
அண்ணாமலைப் பல்கலை.யில் தேசிய அறிவியல் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    அண்ணாமலைப் பல்கலை.யில் தேசிய அறிவியல் தின விழா

    By சிதம்பரம்  |   Published on : 03rd March 2016 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தேசிய அறிவியல் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

     பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் விழாவை தொடங்கி வைத்துப் பேசினார். விழாவில் சர்.சி.வி.ராமன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பதிவாளர் கே.ஆறுமுகம் வரவேற்றார்.  புதுதில்லி அமைட்டி பல்கலைக்கழக வேந்தரும், டிஆர்டிஓ விஞ்ஞானியுமான டபுள்யு.செல்வமூர்த்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

      விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

     அறிவியல் புல முதல்வர் எம்.சபேசன் நன்றி கூறினார். புல முதல்வர்கள் ஜே.ராஜசேகரன் (கலை), திருவள்ளுவன் (மொழி), ரவிச்சந்திரன் (வேளாண்மை), கே.கதிரேசன் (கடல் அறிவியல்), கிருஷ்ணன் (பல் மருத்துவம்), தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் புகழேந்தி உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai