சுடச்சுட

  

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நெய்வேலியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  அக்கட்சியில் புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள குணவழகன், பன்னீர்செல்வம், அன்பரசன், நீதிவள்ளல், தணிகைச்செல்வன், தனகோடி, திருவாதிரை, மாணிக்ரவி,

  இளமங்களம் குமார் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  நிகழ்ச்சியில் மண்டலச் செயலர் திருமாறன், கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், மாவட்டப் பொருளர் துரை.மருதமுத்து, நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிச் செயலர் அ.உ.அதியமான், மாநில அமைப்புச் செயலர்கள் இளமாறன், மோகன்தாஸ், கி.அன்பழகன், காசிநாதன், மன்னர்நந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai