சுடச்சுட

    

    அம்மா கைபேசி வழங்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

    By நெய்வேலி  |   Published on : 03rd March 2016 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மா கைபேசி வழங்கும் திட்டம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

     நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.சி.சம்பத் அம்மா கைபேசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

    அப்போது அவர் கூறியது:    

     தமிழக முதல்வர் 28.09.2015 அன்று 110 விதியின் கீழ், அம்மா கைபேசி வழங்கும் திட்டத்தை அறிவித்தார். 27.02.2016இல் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

     சுயஉதவிக் குழுக்களை பராமரிக்கும் அனைத்து சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைபேசி வழங்கப்படுகிறது.

     இதன் மூலம் ஒவ்வொரு சுய உதவிக்குழுவின் உறுப்பினர் தகவல், சேமிப்பு, வங்கிக் கடன் இணைப்பு, வங்கி இருப்பு, திருப்பிச் செலுத்தும் முறை போன்ற தகவல்களை எளிதாக பெறும் வகையிலும், முறையாக ஆவணப்படுத்திடும் வகையிலுமான மென்பொருள் வசதி அம்மா கைபேசியில்  உள்ளது என்றார்.

     மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், மகளிர் திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, சட்டப்பேரவை உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன், நகர்மன்றத் தலைவர் குமரன், துணைத் தலைவர் சேவல்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai