சுடச்சுட

    

    முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான ஆணழகன் போட்டி, பண்ருட்டி டேனிஷ்மிஷன் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

     பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

     பண்ருட்டி ஹைபவர் உடற்பயிற்சிக் கூடம் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.  போட்டியில் சென்னையைச் சேர்ந்த கிஷோர்(30), மிஸ்டர் தமிழ்நாடு என்ற ஆணழகன் பட்டத்தை வென்றார். 2-ஆம்  இடத்தை சென்னையைச் சேர்ந்த அருணாசலம், 3-ஆம் இடத்தை திருவள்ளூரைச் சேர்ந்த ராமமூர்த்தியும்  பெற்றனர்.

     வெற்றி பெற்றவர்களுக்கு நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.   நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் ஆசைதாமஸ், தொழிலதிபர்கள் வைரக்கண்ணு, எஸ்.வி.அருள், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம், ரோட்டரி செயலர் சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai