Enable Javscript for better performance
உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    உலக வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை தெருமுனைப் பிரசாரம் செய்தார்.

     தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை உலக வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இந்நிலையில், உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் இருசக்கர வாகன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

     மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் புறப்பட்ட பிரசாரம் 10-ஆம் தேதி கன்னியாகுமரியில்  நிறைவடைகிறது.

     சென்னையில் இருந்து தாம்பரம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் வழியாக புதன்கிழமை பண்ருட்டி வந்தடைந்தார்.   பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே தெருமுனைப் பிரசாரம் மேற்கொண்டார். மாநில துணைச் செயலர் ஜெயமூர்த்தி, மாவட்ட துணைச் செயலர் கே.என்.சி.மோகனகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai