சுடச்சுட

  

  என்.எல்.சி.முதலாவது சுரங்க விரிவாக்கத்தில் மண் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஸ்பிரெடர் இயந்திரம் திடீரென மண்ணில் புதைந்தது. அதிகாரிகளின் தீவிர முயற்சிக்குப்பின் அந்த இயந்திரம் பத்திரமாக மீட்கப்பட்டது. 

  நெய்வேலியில், என்.எல்.சி. சுரங்கத்தில் மண் அகற்றும் பணியில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புதன்கிழமை முதலாவது சுரங்க விரிவாக்கத்தில் உள்ள மிடில் பெஞ்சில் ஸ்பிரெடர் இயந்திரம் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தது.

  அப்போது, ஒரு இடத்தில் சில அடி ஆழத்துக்கு இயந்திரம் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து என்.எல்.சி. உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு இயந்திரத்தை மீட்டனர். இதனால்

  உற்பத்தி பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai