சுடச்சுட

  

  மருத்துவ உதவி, கட்டணமில்லா புதிய மருத்துவ நல காப்பீட்டுத் திட்டம்-2014-னால், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காண வேண்டி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   பழைய ஆட்சியர் அலுவலகம் முன் சங்க மாவட்டத் தலைவர் (பொறுப்பு) எஸ்.நம்மாழ்வார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தற்போதுள்ள நான்கு ஆண்டுகளுக்கு காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சம் என்பதை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும்.

  காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அனைத்து மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காக, காப்பீட்டு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும் தொகையில் எவ்விதமான பாகுபாடின்றி உரிய தொகையை நிர்ணயித்தல், சிகிச்சையின் போது ஏற்படும் கூடுதல் தொகையை உயிர் காக்கும் நோக்கில் அரசே செலுத்த திட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  ஆர்ப்பாட்ட நிறைவில் முதல்வருக்கு ஏற்கெனவே

  எழுதிய கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

  ஆர்ப்பாட்டத்தில், துணைத் தலைவர் ஜி.வேணு, பொருளர் தட்சிணாமூர்த்தி, செயலர் ஆ.ராமதாஸ், கடலூர் கிளை நிர்வாகிகள் எஸ்.தட்சிணாமூர்த்தி, காமதேனு, மாசிலாமணி, கிட்டப்பா, மகாலிங்கம், செல்வராசு, சடகோபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai