Enable Javscript for better performance
கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், நுண்ணுயிரியல் துறை மற்றும் மாவட்ட தொழுநோய் ஒழிப்புத் திட்ட மருத்துவக் குழு சார்பில் தொழுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் தலைமை வகித்து, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார்.

    பேராசிரியர்கள் க.மனோகரன், சு.தமிழாழிக்கொற்கை வேந்தன், மருத்துவர் நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மருத்துவக் குழு சார்பாக என்.ராமலிங்கம் தொழுநோய் பாதிப்பு குறித்து விளக்கினார்.

    நுண்ணுயிரியல் துறைத் தலைவர் கு.நிர்மல்குமார் பேசினார். சீசா தொண்டு நிறுவனம் சார்பில், தொழுநோய் விழிப்புணர்வு குறு நாடகம் நடத்தப்பட்டது.   பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    முன்னதாக, தாவரவியல் துறைத் தலைவர் ச.கீதாதேவி வரவேற்க, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் பேராசிரியர் ம.ஆனந்தராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai