சுடச்சுட

  

  வீடுகளின் பூட்டை உடைத்து 17 பவுன் திருட்டு

  சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதிகளில் அண்மையில் இருவேறு இடங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டன.

   சிதம்பரம் விழல்கட்டி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த தண்டபாணி (60). ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான இவர், கடந்த பிப்.22ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டு 30 ஆம் தேதி வீடு திரும்பினார்.

   அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, 820 கிராம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. 

   இதுகுறித்து புகாரின் பேரில், நகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

   இதேபோன்று, சிதம்பரம் அண்ணாமலை நகரில் ஜவகர் குடியிருப்பில் வசிக்கும் சந்திரக்குமார் மனைவி வைஜெயந்திமாலா (60). இவர் கடந்த பிப்.11-ம் தேதி வெளியூர் சென்றுள்ளார். திங்கள்கிழமை வைஜெயந்திமாலா வீடு திரும்பிய போது, வீட்டில் பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.  இதுகுறித்த புகாரின் பேரில்  அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

   தொடர் வாகன திருட்டு:

  சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதியில் வீடு புகுந்து திருடுவதும், இருசக்கர வாகனங்கள் திருடு போவதும் அதிகரித்து வருகிறது.

   கடந்த மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போய் உள்ளன.   தொடர் திருட்டினால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

  மகள் சாவில் சந்தேகம்: தாய் புகார்

  பண்ருட்டி அருகே உயிரிழந்த தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

   பண்ருட்டி அடுத்துள்ள கோட்டலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியம் (40). இவரது மகள் பாரதி (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   புதுப்பேட்டை, நாடார் தெருவில் வசித்து வரும் ரமேஷ்-பாரதி தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

   இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பாரதி வீட்டில் தூக்கில் இறந்த நிலையில் காணப்பட்டார். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   இதில், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தாய் பாக்கியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மளிகைக் கடை சூறை: இருவர் கைது

  நெய்வேலியில் மாமுல் கேட்டு மளிகைக் கடையை சூறையாடியதாக  இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

   மேலும், தலைமறைவான மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார். நெய்வேலி, புதுநகர் வட்டம் 13-ல் மளிகை கடை நடத்தி வருபவர் இளவரசன் (29). திங்கள்கிழமை இரவு இவரது கடைக்கு வந்த, நெய்வேலி, 25-வது வட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன் (26), 4-வது வட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (26), செல்லப்பன் ஆகியோர் மாமுல் கேட்டனராம்.  தரவில்லை என்றால் இங்கு கடை நடத்த முடியாது என மிரட்டல் விடுத்தனராம்.

  இளவரசன் மாமுல் தராததால் ஆத்திரமடைந்த மூவரும் கடையில் இருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தினராம்.  இதுகுறித்து இளவரசன் அளித்த புகாரின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நிரஞ்சன் மற்றும் ராஜ்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  தலைமறைவாக உள்ள செல்லப்பனை தேடி வருகின்றனர்.

  கட்டடத் தொழிலாளி தற்கொலை

  சிதம்பரம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

   சிதம்பரம் அருகே விபீஷணப்ரும் சிவசக்திநகர் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலகுரு (31). கம்பி பிட்டரான இவருக்கும், மனைவி மரியா ஜெனினுக்கும் இடையே அண்மையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில், மரியஜெனின் கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் விட்டுக்குச் சென்று விட்டார். இதனால் மனமுடைந்த பாலகுரு செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai