சுடச்சுட

    

    சிதம்பரத்தில் தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் சார்பில், எம்.கே.தியாகராஜ பாகவதர் 107-ம் ஆண்டு பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    சிதம்பரம் சபாநாயகர் தெருவில் உள்ள தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க அலுவலக வளாகத்தில், தியாகராஜ பாகவதர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.  நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமை வகித்தார். ஆலோசகர்கள் ஆர்.பாவாடை பத்தர், எம்.கோவிந்தராஜன், சிவகாட்சம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர பொருளாளர் எஸ்.ராஜ்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணிச் செயலாளர் எஸ்.ரமேஷ், எம்.பாலசுப்பிரமணியன், ஏ.மகாலிங்கம், எம்.திருஞானம், ஆர்.உமாபதி, எம்.சுரேஷ், ஆர்.தில்லைநடராஜன், ஆர்.சேகர், ஜி.முருகன், ஆர்.அருள், ஜி.சிவராமன் என்.வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹெச்.செந்தில் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai