சுடச்சுட

  

  பிளஸ் 2 தேர்வு: சிதம்பரத்தில் 2,776 பேர் எழுதுகின்றனர்

  By சிதம்பரம்  |   Published on : 03rd March 2016 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரத்தில் 7 மையங்கள் மூலம் 2,776 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுத உள்ளனர்.

   பிளஸ்-2 பொதுத் தேர்வு வருகிற மார்ச் 4-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் ஆண்டு முழுவதும் தாம் கற்ற பாடங்களை திருப்புதல் செய்வதற்காக ஒவ்வொரு பாடத் தேர்வுக்கும் போதிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.    சிதம்பரத்தில் உள்ள 5 அரசுப் பள்ளிகள், 5 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 4 மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட  14 பள்ளிகளைச் சேர்ந்த 2,776 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.  அவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான அனுமதிக் கடிதம் (ஹால் டிக்கெட்) பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

  மாற்றுத் திறனாளி மாணவர்கள்:  சிதம்பரம் நகரில் 5 பார்வையற்ற மாணவர்கள்,  3 காது கேளாத மாணவர்கள், ஊனமுற்ற மற்றும் மன வளர்ச்சி குன்றிய தலா ஒரு மாணவர் உள்ளிட்ட 10 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.   இவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai