சுடச்சுட

  

  மருத்துவத் துறையில் தமிழகத்தை முன்னேற்றியவர் ஜெயலலிதா: அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

  By நெய்வேலி  |   Published on : 03rd March 2016 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மருத்துவத் துறையில் தமிழகத்தை முன்னேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா எனத் தெரிவித்தார் அமைச்சர் எம்.சி.சம்பத்.

  கடலூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் ரெட்டிச் சாவடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

   கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எம்.சி.சம்பத் நல உதவிகளை வழங்கிப் பேசியது:

   அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் நல உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டவர் முதல்வர் ஜெயலலிதா தான்.

   அரசின் திட்டங்கள் எல்லாம் பெண்களை சென்றடைய வேண்டும், அவர்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். எனவே, ஜெயலலிதாவிற்கு பெண்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.

   ஊழலை ஒழிப்போம், மருத்துவத் துறையில் சாதித்துள்ளோம் என அன்புமணி ராமதாஸ் மக்களை ஏமாற்றி வருகிறார். மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக அவர் மீது 2 வழக்குகள் சிபிஐ விசாரணையில் உள்ளன.

  உண்மையில் மருத்துவத் துறையில் தமிழகத்தை முன்னேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா தான் என்றார்.

   கூட்டத்துக்கு வடக்கு ஒன்றியச் செயலர் பி.வி.ஜெ.முத்துகுமாரசாமி தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் தனசேகர், ஒன்றிய அவைத் தலைவர் ஜெயகாந்தன், துணைச் செயலர் கல்யாணி ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

  தலைமை கழகப் பேச்சாளர்கள் நடிகர் எஸ்.ஆனந்தராஜ், என்.எஸ்.கோவிந்தராஜூலு, மாவட்ட அவைத் தலைவர் கோ.ஐயப்பன், கடலூர் நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன், துணைத்தலைவர் ஜி.ஜெ.குமார், ஒன்றிய துணைத் தலைவர் பாலாம்பிகை முத்துக்குமாரசாமி, விவசாய அணிச் செயலர் கே.காசிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai