Enable Javscript for better performance
மாவட்டத்தில் நகைக் கடைகள் அடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தங்க நகைகளுக்கு கலால் வரி விதிக்கப்பட்டதை கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள தங்க நகை வியாபாரிகள் புதன்கிழமை முதல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிப்பு அமல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்தார்.  

    இதனைக் கண்டித்தும், ரூ.2 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான தொகைக்கு நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் பான் எண்ணை அளிக்க வேண்டியது அவசியம் என்கிற அறிவிப்பை எதிர்த்தும், புதன்கிழமை முதல் மூன்று நாள்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    அதன்படி, மாவட்டத்தில் புதன்கிழமை அன்று 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாக தமிழ்நாடு அனைத்து நகை வியாபாரிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் எஸ்.பி.தேவநாதன் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், வியாழக்கிழமை 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருக்கும், வெள்ளிக்கிழமை மாலை மட்டும் பூஜை செய்வதற்கு கடைகள் திறக்கப்படும்  எனத் தெரிவித்தார்.

    கடலூரில், திருப்பாதிரிப்புலியூர் சாலை, லாரன்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தக பாதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai