சுடச்சுட

  

  வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்: தமிழ்நாடு வணிகர் சங்கம்

  By நெய்வேலி  |   Published on : 03rd March 2016 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006-ல் உள்ள குழப்பமான விதிகள் திருத்தம் தாற்காலிகமாக ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

  இதனால், வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

  இதுகுறித்து அச்சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலர் ச.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006-ல் அரசு கொண்டு வந்துள்ள விதிகள் திருத்தத்தால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

  இணைய வழி மூலம் கணக்கு பராமரிப்பது என்பது சாத்தியமற்றது.  இந்த புதிய திருத்தத்தை அரசு கைவிட வேண்டும்.

  அரசு டிசிஎஸ் மூலம் தயாரித்துள்ள மென்பொருளை எளிமைப்படுத்தி வணிகர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில், வணிகர்களை கலந்து ஆலோசித்து உரிய மாறுதல்கள் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை

  யின் மாநிலத் தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் லிமிடெட், மதுரை தலைவர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் ஆகியோர், விற்பனை வரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் விற்பனை வரித்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், இந்தக் குழப்பமான விதிகள் திருத்தம் தாற்காலிகமாக ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

  மேலும், இது சம்பந்தமாக தமிழக அரசுடன் பேசி நல்ல முடிவினை அரசு அறிவிக்கும் என்கின்ற நிலைப்பாடு உள்ளதால், வணிகர்கள் எவ்வித ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவைகளை நடத்துவதில்லை என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினுடைய கடலூர் மாவட்டம் முடிவு செய்துள்ளது. 

  அரசுக்கு எதிராக நடைபெறும் எவ்வித ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் வணிகர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai