சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

     இதற்கான விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

     விழாவில் பங்கேற்ற அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.14.48 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 120 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும் வழங்கிப் பேசினார்.

         நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், சட்டப்பேரவை உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன், நகர்மன்றத் தலைவர் குமரன், துணைத் தலைவர் சேவல்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai